அண்ணா பல்கலை வளாகத்தில் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘X’ தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “மாணவி பாலியல் வழக்கில் அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும். அது வரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கண்டித்து நாடு முழுவதும் அதிமுகவின் போராட்டம் தொடரும். இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்?” என குறிப்பிட்டுள்ளார்.