திருப்பூர்: வரப்பாளையத்தில் கார் மோதிய விபத்தில் பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த ராமன் (54) என்பவர் பாதயாத்திரை சென்றுகொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக சென்ற கார் மோதியதில் உயிரிழந்தார். மேலும், வினையன், பொன்னுசாமி, சுந்தரம், துரை, அமுதராஜ் உள்ளிட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் தாராபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.