நாகைய சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு அதிக தொப்பை இருந்த காரணத்தால் தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டும் டயட் இருந்தும் தொப்பையை குறைக்க முயற்சித்துள்ளார். கடந்த 5 வருடங்களாக செய்த இந்த முயற்சி பலனளிக்காததால் மருத்துவரை அணுகியுள்ளார். பின்னர் ஸ்கேன் செய்து பார்த்தபோது கர்ப்பப்பை அருகே கட்டி ஒன்று இருப்பது தெரியவந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்து பெண்ணின் வயிற்றில் இருந்த 30 சென்டிமீட்டர் நீளம் 26 சென்டிமீட்டர் அகலம் கொண்ட 11 கிலோ எடையுள்ள சினைப்பை கட்டியை மருத்துவர் அகற்றியுள்ளார்.