தூத்துக்குடி: அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கபப்ட்டது. அதன்படி மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “இத்தனை மாணவர்களை பார்ப்பதில் Dravidian Stock-ஆக பெருமை கொள்கிறேன். இதற்கு மாறக ஒரு Stock உள்ளது. சாதி, மத உணர்வுகளை தூண்டும் வன்மம் பிடித்த Stock” என்றார்.