தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவியை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, ஆளுநரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் மாணவி, பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தை அதிரவைத்த நிலையில் அது தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.