வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்ட ஷகிபுல் ஹசின் - சப்ரினா தம்பதி ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தனர். கடந்த சனிக்கிழமை (டிச. 28) அன்று மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வால்போல் கடற்கரைக்கு தங்களின் இளைய மகள் சையினாவுடன் சென்றனர். அப்போது கடல் அலையில் சையினா அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஹசினும், சப்ரினாவும் ஆழ்கடலில் குதித்து மகளை காப்பாற்றிய நிலையில் அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.