இஸ்ரேல் தாக்குதலில் இருந்து நூலிழையில் உயிர்தப்பிய பரபரப்பு வீடியோவை உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் பகிர்ந்துள்ளார். அவர் தனது X தள பக்கத்தில், "ஏமனில் உள்ள சனா விமான நிலையத்தில், டிச.26 அன்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், எங்கள் விமானத்தின் பணியாளர் ஒருவர் காயமடைந்தார். மேலும் விமான நிலையத்தில் 2 பேர் தாக்குதலில் உயிரிழந்தனர். நானும் என்னுடன் இருந்த அதிகாரிகளும் பாதுகாப்பாக உள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.