சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் 30-வது தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று (டிச. 28) தொடங்கியது. போட்டியை ஆர்எம்கே கல்விக்குழுமங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், இந்திய நெட்பால் சம்மேளத்தின் தலைவர் சுமன் கவுசிக் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். சிறுமியர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழக அணி 25-4 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி அசத்தியது.