கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியாவில் ஆபத்து நிறைந்த நாட்ரோன் ஏரி உள்ளது. இது தனித்துவமான இயற்கை அதிசயமாகும். இந்த ஏரி கருஞ்சிவப்பு - சிவப்பு கலந்த நிறத்தில் காட்சி அளிக்கிறது. சுற்றியுள்ள எரிமலை மண்ணிலிருந்து சோடியம் கார்பனேட் கலந்த தாதுக்கள் இந்த ஏரியில் கலக்கின்றன. இந்த ஏரிக்கு செல்ல தடை செய்யப்பட்டிருந்தாலும் சாகசக்காரர்கள், இயற்கை ஆர்வலர்கள் அங்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.