தென் கொரியாவில் 175 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் 6 பேர் என 181 பேருடன் சென்ற விமானம் விபத்தில் 179 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாங்காக்கில் இருந்து தென் கொரியாவின் யோன்ஹாப் சென்ற விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிரங்கியது. அப்போது ஓடுதளத்தில் மோதி விமானம் தீப்பிடித்தது. இந்த விபத்தில், இருவரைத் தவிர விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.