கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தை அடுத்த கதர்கா என்ற கிராமத்தில் பாக்கியனாவதி என்ற கோயில் உள்ளது. மிகவும் பிரபலமான இந்த கோயிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அந்த கோயிலில் உள்ள உண்டியல் பணத்தை நேற்று (டிச.28) எண்ணினர். அப்போது ஒரு இருபது ரூபாய் நோட்டில் ஏதோ ஒரு வாசகம் எழுதப்பட்டிருப்பதை பார்த்த ஊழியர் அதிர்ச்சியடைந்தார். அதில், “என் மாமியார் சீக்கிரமாக மரணிக்க வேண்டும்” என எழுதப்பட்டிருந்தது.