இந்தியாவுக்கு கருக்கலைப்பு சட்டத்தின் அவசியம் வந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்த போது டாக்டர் சாந்திலால் ஷா தலைமையிலான கமிட்டி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், இந்திய நாடாளுமன்றத்தில் மருத்துவ கருக்கலைப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு ஆகஸ்ட் 1971ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தைத் தவிர, இந்தியா முழுவதும் இச்சட்டம் அமலுக்கு வந்தது .