கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது டோஸ்ஐ 75 முதல் 90 நாட்களுக்குள் செலுத்திக்கொண்டால் 90% பலன் கிடைக்கும் என்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 2வது டோஸ் செலுத்துவதற்கு 1 மாத இடைவெளி இருந்தால் 70% பலன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டரை அல்லது மூன்று மாத இடைவெளி இருப்பது கூடுதல் பலன் தருவதாக கோவிஷீல்ட் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.