சர்வதேச சாக்லேட் தினம் என்பது பல்வேறு வகையான சாக்லேட்டுகளை பயன்படுத்தி சமையல் பரிசோதனை மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வருடாந்திர நிகழ்வாகும். இந்த நாளில் மக்கள் சாக்லேட்டுகளை வைத்து புதிய சமையல் வகைகளை முயற்சி செய்கின்றனர். மேலும் இனிப்பை பற்றி அறிவதற்கு பல நிகழ்வுகளிலும் பங்கேற்கின்றனர். இந்த நாள் சாக்லேட்டை ரசித்து ருசிக்கும் ஒரு நாளாகும். நீங்களும் உங்கள் பிடித்தமானவர்களுடன் சாக்லேட்டை உண்டு மகிழுங்கள்.