ராகுல்காந்தியின் சாதி என்ன..? பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து

83பார்த்தது
ராகுல்காந்தியின் சாதி என்ன..? பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் சாதி என்ன? என்று கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. பசங்கௌடா பாட்டீல் கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய அவர், "இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி கூறுகிறார். ஆனால், அவருக்கு அவர் பிறந்த சாதியே தெரியாது. அவர் பிராமணரா? அவர் பூணூல் அணிகிறாரா? அவர் கிறிஸ்தவரா முஸ்லிமா என்பதை விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி