கடலும், நதியும் சேரக்கூடிய இடத்தில் மணலால் உருவாகக்கூடிய ஒரு நிலப்பரப்பே டெல்டா என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் பல ஆறுகள் இருந்தாலும் காவிரி ஆறு மட்டுமே டெல்டாவை உருவாக்குகிறது. டெல்டா உருவாக வேண்டும் என்றால் நதியானது போதுமான அளவு மணல்களை சுமந்து வரவேண்டும் மேலும் அது கடலில் சேரும் இடத்தில் வேகம் குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் டெல்டா உருவாகும். இல்லையென்றால் அனைத்து மணல்களும் கடலுக்குள் அடித்துச் செல்லப்படும்.