குடல் அழற்சியின் இரண்டு வகைகள் என்ன?

1109பார்த்தது
குடல் அழற்சியின் இரண்டு வகைகள் என்ன?
குடல் அழற்சி நோயை இரண்டு முக்கிய வகைகளாக பிரிக்கலாம். முதலாவதாக ‘கிரோன்’ நோய். இது செரிமான மண்டலத்தின் எந்த பகுதியிலும் வீக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் பெரும்பாலும் சிறுகுடலின் வால் முனையை இந்த நோய் பாதிக்கிறது. வாயிலிருந்து மல வாய் வரை உள்ள குடல் பாதைகள் இதனால் பாதிக்கப்படுகிறது. இரண்டாவது ‘அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி’. இது பெருங்குடல் அழற்சியை உள்ளடக்கியது. இந்த இரண்டு அழற்சியும் கடுமையான வயிற்றுப்போக்கு, எடையிழப்பு, சோர்வு மற்றும் வயிற்று வலி ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.

தொடர்புடைய செய்தி