ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்

69பார்த்தது
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி மாலை 3:30 மணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இரவு 7:30 மணிக்கும் எதிர்கொள்கிறது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடம் தீர்மானிக்கப்படும். தற்போது 16 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான், கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் 2வது இடத்தில் தொடரும். பஞ்சாப் அணிக்கு எதிராக அந்த அணி தோற்று சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றால், ஹைதராபாத் 17 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு செல்லும். கொல்கத்தா முதல் இடத்திலும், ராஜஸ்தான் 3வது இடத்திலும், ஆர்சிபி 4வது இடத்திலும் இருக்கும்.