விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். அதிகார பகிர்வு குறித்து திருமாவளவன் பேசிவரும் நிலையில் முதலமைச்சர் உடன் இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, அக்டோபர் 2ஆம் தேதி நடக்கவுள்ள மதுஒழிப்பு மாநாட்டிற்கு, அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சரை சந்திக்க இருப்பதாக திருமாவளவன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.