நாளை திருமணம்.. இன்று மணப்பெண் கடத்தல்

80பார்த்தது
சேலம் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு நாளை (மார்ச்.,3) திருமணம் நடைபெற இருந்த நிலையில், இளைஞர்கள் சிலர் காரில் கடத்திச் சென்றுள்ளனர். பெண்ணை கடத்திச் சென்ற காரை உறவினர்கள் மடக்கிப் பிடித்த நிலையில் அந்த காரில் இளம்பெண் இல்லாததால் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து காரில் இருந்தவர்களுடன், உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி