அதிமுக ஆட்சியில் தூக்கத்தை தொலைத்தோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் X தனது தள பக்கத்தில், "தூங்கி வழிந்த நிர்வாகத்தால், மனிதத்தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக ஆட்சிக்காலம்! இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம், நமது திராவிட மாடல் ஆட்சிக்காலம்!" என்று பெருமிதத்துடன் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.