நடிகர் விஜய் போன்றவர்கள் கட்சி தொடங்குவதால் திமுகவிற்கு எந்த கவலையும் இல்லை என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். திமுக வளர்ந்த கட்டமைப்புகளை கொண்ட ஒரு மிகப்பெரும் கட்சி என்றும், எங்களது வெற்றி நடை தொடரும் என கூறினார். தமிழகத்தில் இந்த அளவிற்கு இட ஒதுக்கீடு இருக்கிறது என்றால் அதற்கு காரணம் திமுக தான் என்றார். கடந்த ஆண்டை விட தமிழகத்திற்கு கூடுதலாக 10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதால், இந்த ஆண்டு கண்டிப்பாக பால் தட்டுப்பாடு வராது என்று தெரிவித்தார்.