கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95-ஆக அதிகரித்துள்ளது. இன்னும் நூற்றுக்கணக்கான மக்கள் மீட்கப்படாத நிலையில், உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறகு. வயநாடு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மீட்புப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும், மீட்புப்பணியில் இராணுவம் களமிறங்கி உள்ளது. மேலும், இன்றும் நாளையும் கேரளாவில் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.