வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பூஞ்சேரி மட்டம் எனும் கிராமம் வரைபடத்தில் இருந்தே காணாமல் போயுள்ளதாக கேரள அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். மேலும், "நிலச்சரிவின் ஆரம்பப் பகுதியான பூஞ்சேரி மட்டம் கிராமம் முற்றிலும் அழிந்து போனது. நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்த பூஞ்சேரி மட்டத்தில் பேரிடருக்குப்பின் ஒரு வீடுகூட இல்லை. பூஞ்சேரி மட்டம் கிராமத்தில் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட வாய்ப்பில்லை" என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.