கேரள நடிகையின் தர்பூசணி குறியீடும், பாலஸ்தீன ஆதரவும்!

64பார்த்தது
கேரள நடிகையின் தர்பூசணி குறியீடும், பாலஸ்தீன ஆதரவும்!
கேன்ஸ் திரைப்பட விழாவில் 'Grand Prix' விருதை வென்ற 'All We Imagine as Light'என்ற மலையாள திரைப்படத்தின் நடிகை கனி குஸ்ருதி கையில் வைத்திருந்த தர்பூசணி வடிவிலான கைப்பை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தர்பூசணி பாலஸ்தீன மக்களின் போராட்டத்தின் அடையாளமாகவும், அவர்களின் ஒற்றுமையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. வெட்டப்பட்ட தர்பூசணியின் நிறம் (சிகப்பு, பச்சை, கருப்பு, வெள்ளை) அப்படியே, பாலஸ்தீன கொடியின் நிறத்தை பிரதிபலிக்கிறது. காசா மீது இஸ்ரேல் போர் நடத்தி வரும் நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் தர்பூசணி வடிவிலான பையை கொண்டு வந்து நடிகை கனி குஸ்ருதி பாலஸ்தீனம் மீதான தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி