ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை – 2,618 பேர் கைது

63பார்த்தது
ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை – 2,618 பேர் கைது
ரயிலில் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும்போது ரயில் ஓட்டுநர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அபாய சங்கிலிகள் பயன்படுகின்றன. இந்நிலையில் 2023-24 நிதியாண்டில் தவறுதலாகவும், உரிய காரணம் இன்றியும் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த 2632 வழக்குகளில் 2618 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 15 லட்சத்து 45 ஆயிரத்து 165 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் தேவையின்றி பயணிகள் எச்சரிக்கை சங்கிலியை பயன்படுத்த வேண்டாம் என தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி