சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் சென்னை அணி சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்றுள்ளார்.
சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து
தோனி விடுவிக்கப்பட்டுள்ளார். தோனியின் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி.