இதர நிதி நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுவிட்ட நிலையில் பொது இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படாமல் இருப்பது நியாமல்ல என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது குறித்தான அவரது எக்ஸ் பதிவில், பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முந்தைய ஆண்டில் ரூ 3529 கோடி நட்டம் ஏற்பட்டது. இந்த ஆண்டு ( 2023 - 24) ரூ 7588 கோடி லாபம் ஈட்டும் நிலைக்கு முன்னேறி உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.