நீலகிரியில் பனி, மழைக் காலத்திலும் வெள்ளைப்பூண்டு விளைச்சல் அமோகமாக இருந்தும் சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். "வெள்ளைப்பூண்டு கடந்த முறை 400 முதல் 500 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது 140 முதல் 160 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது, மருந்து விலையும் அதிகமாக உள்ளது. ஒரு முறை மருந்து தெளிப்பதற்கு 5000 ரூபாய் செலவாகிறது. இதனால் அசலுக்கே அல்லாடுகிறோம்" என்றனர்.