திருப்பத்தூர் மாவட்டம் அருகே 9 வயது சிறுமிக்கு, லட்டு தருவதாக ஆசை காட்டிய முதியவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், உடனடியாக இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், குற்றம்சாட்டப்பட்ட முதியவரை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.