இந்தியாவில் விவோ நிறுவனம் புதிதாக Vivo Y29 என்ற 5G ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய Y29 5G மொபைலானது 4GB + 128GB, 6GB + 128GB, 8GB + 128GB, 8GB + 256GB என மொத்தம் நான்கு வேரியன்ட்ஸ்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விலைகள் முறையே ரூ.13,999, ரூ.15,499, ரூ.16,999 மற்றும் ரூ.18,999-ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த மொபைல் டயமன்ட் பிளாக், கிளேசியர் ப்ளூ மற்றும் டைட்டானியம் கோல்டு உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன.