சத்தீஷ்கார்: காங்கர் மாவட்டத்தின் அருகே சொகுசு கார் ஒன்று எதிர் திசையில் வந்த 2 பைக் மீது மோதியதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். போலீஸார் விசாரணையில், சொகுசு காரின் டிரைவர் குடிபோதையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிய வந்துள்ளது. 2 பைக்கில் பயணித்த காம்தி கவாடே, பிரியங்கா நிஷாத், செவன் குமார் மற்றும் சோகேஷ்வர் பிரஜாபதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இவர்களுடன் பயணித்த மற்றொரு நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.