உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்றாகும். அதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அது உடலில் சீரான செயல்பாட்டையும், செயல்திறனையும் பாதிக்கிறது. சிறுநீரக செயலிழப்புக்கான பொதுவான அறிகுறிகள் சிறுநீரில் காணப்படுகின்றன. அதன்படி, அடர் பழுப்பு நிறத்தில் சிறுநீர் கழிப்பது, குறைவான சிறுநீர் வெளியேறுவது, சிறுநீரில் ரத்தம் கசிவது போன்றவை அறிகுறிகள் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக வைக்க முடியும்.