ஸ்ரீவில்லிபுத்தூர் |

ஶ்ரீவி: சதுரகிரிக்கு தினமும் செல்ல அனுமதி-மாவட்ட நிர்வாகம்..

ஶ்ரீவில்லிபுத்தூரை அடுத்த சதுரகிரி சுந்திரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று ஏப். 3 முதல் தினந்தோறும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவு. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி தினந்தோறும் பக்தர்கள் செல்ல இன்று ஏப். 3 முதல் அனுமதி என்பது வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மலையேற அனுமதிக்கப்படுவதாகவும் காலை 6: 00 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படும் எனவும், மலைக்கு சென்ற பக்தர்கள் மாலை 4 மணிக்குள் அடிவாரப் பகுதியை நோக்கி வரவேண்டும் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது, பக்தர்கள் இரவில் மலையில் தங்குவதற்கு அனுமதி கிடையாது, என்று மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், வருவாய் மற்றும் வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்பு பக்தர்கள் தினந்தோறும் மலையற அனுமதிக்கப்பட்ட உத்தரவு பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோஸ்


தமிழ் நாடு