*விருதுநகரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பாக இலவச பட்டா மனை வேண்டி 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியிடம் மனு*
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நார்த்தம் பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 35க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும்,
மேலும் பலர் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் வேலை இல்லாத காலத்தில் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவருவதாகவும்,
தங்களின் நிலைமையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பாக 35க்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்