உலகில் 6.10 கோடி பேர் 'ஆட்டிசம்' பாதித்தவர்கள். 100ல் ஒரு குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஏப்ரல். 2ல் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு பல்வேறு வகைகளில் ஏற்படுத்தப்படுகிறது. பேரணிகள், கூட்டங்கள், பிரச்சாரங்கள் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.