முன் விரோதம் காரணமாக தாக்கிய நபர்கள் மீது வழக்கு பதிவு

63பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சார்ந்தவர் ரஞ்சித் குமார் (27). இவருடைய குடும்பத்திற்கும் ஜெய பீட்டர் என்பவர் குடும்பத்திற்கும் இடையே கடந்த சில தினங்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை மனதில் வைத்துக்கொண்டு சம்பவதினத்தன்று ஜெய பீட்டர், சமாதான பிரபுவாகிய இருவரும் ரஞ்சித் குமாரை தரகுறைவாக பேசி தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரஞ்சித் குமார் கொடுத்த புகார் அடிப்படையில் மல்லாங்கிணறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி