அரசு பள்ளிக்கு தேவையான பொருட்கள் வழக்கப் பட்டது

61பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அ. முக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 24-ந்தேதி தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம்தென்னரசு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாணவ - மாணவியர் கழிவறை வசதி, அறிவியல் ஆய்வகங்கள், பள்ளிக்கான சுற்றுச்சுவர், சமையலறை மற்றும் டேபிள், சேர் போன்ற பிற அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரும்படி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நிதியமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதனை கேட்டறிந்த நிதியமைச்சர், பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்விக்கு தேவையான அத்தனை வசதிகளும் திறம்பட செய்து தரப்படும் என உறுதியளித்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அளித்த ஐந்து நாட்களுக்குள் அவரது தந்தையின் பெயரில் இயங்கும் வே. தங்கப்பாண்டியன் அறக்கட்டளை சார்பில் முதற்கட்டமாக பள்ளிக்கு தேவையான டேபிள், சேர், ஆகியவற்றை இன்று நரிக்குடி ஒன்றிய பெருந்தலைவர் காளீஸ்வரி சமயவேலு பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினார். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சுமார் 12 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுவதற்கான ஒப்பதலும் அளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சுவர், ஆய்வகம் போன்ற கட்டிடங்கள் மிக விரைவில் கட்டித் தரப்படும் என உறுதியளித்துள்ளனர்.

திடீர் விசிட் அடித்து மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கு தேவையான டேபிள், சேர் வழங்கிய தமிழ்நாடு நிதி அமைச்சருக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி