இந்திய கடற்படை சார்பில் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய கே-4 ஏவுகணை சோதனை நவ.27 அன்று காலை விசாகப்பட்டினம் அருகே வங்கக்கடலில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வல்லமை பெற்ற இந்த ஏவுகணை சுமார் 3,500 கி.மீ தூரத்திற்கு பயணித்து இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட அரிஹாத் நீர்மூழ்கி கப்பலில் இருந்து இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அடுத்ததாக 5,000 மற்றும் 6,000 கி.மீ செல்லும் ஏவுகணை சோதனை நடத்தப்படவுள்ளது.