பேங்க் ஆஃப் பரோடா வங்கி ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை தனிநபர் கடன்களை வழங்குகிறது. வட்டி விகிதமானது பொதுவாக 16% வசூலிக்கப்படுகிறது. வங்கியின் இணையதள பக்கத்தில் 'தனிநபர் கடன்' விருப்பத்தை தேர்ந்தெடுத்து, முறையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கவும். அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் 15 நிமிடங்களில் கடன் வழங்கப்படும். கடனை திருப்பிச் செலுத்த 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படும்.