தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட காளை இனங்கள் தான் காங்கேயம் காளைகள். கடுமையான வெயில், பஞ்சம் கால நிலைகளிலும் பனையோலை, எள்ளுச்சக்கை, வேப்பந்தழை போன்ற கிடைக்கும் உணவுகளை உண்டு வாழக்கூடியவை. 4000-5000 கிலோ எடையிலான வண்டி பாரத்தை இழுக்கக்கூடியவை. இந்த வகை காளைகளை பிற நாடுகளில் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். கடுமையான காலநிலைக்கும், உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்பவும் தகவமைத்து வாழக்கூடிய இவை தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகும்.