ராகவா லாரன்ஸின் பெயரைச் சொல்லி பண மோசடி செய்த இளைஞர்!

62பார்த்தது
ராகவா லாரன்ஸின் பெயரைச் சொல்லி பண மோசடி செய்த இளைஞர்!
சென்னையைச் சேர்ந்த வீர ராகவன், தன் மகளின் படிப்பு செலவுக்காகச் சமூகவலைத்தளத்தில் உதவி கேட்டுள்ளார். அவரை தொடர்பு கொண்டு பேசிய சதீஷ் என்பவர், தான் ராகவா லாரன்ஸின் உதவியாளர் என்றும், படிப்பு செலவுக்கு உதவுவதாகவும் கூறியுள்ளார். மேலும் எங்களின் தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராகக் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று கூறி 61,550 ரூபாயைப் பெற்று மோசடி செய்துள்ளார். புகாரின் பேரில் சதீஷை கைது செய்த போலீசார், அவர் ராகவா லாரன்ஸின் உதவியாளர் இல்லை என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி