புயல் எச்சரிக்கை காரணமாக, வானிலை அறிக்கைகளின் அடிப்படையில், விமானங்களை இயக்கப்படும் என சென்னை விமான நிலைய நிர்வாகம் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருந்தால், விமான சேவையை குறைக்கவோ, தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தாங்கள் பயணிக்க இருக்கும் விமானங்களின் நிலை என்ன? என்பது குறித்து விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.