ஃபெஞ்சல்" புயல் கரையை கடக்கும் போது 60 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்களை கீழே இறக்கி வைக்குமாறும் அல்லது உறுதியாக நிலைநிறுத்த வேண்டும் என்றும் அனைத்து விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக இறக்கி வைக்குமாறும் அல்லது புயல் காற்றினால் விளம்பரப் போர்டுகள் சாயவோ அல்லது விழாமலோ இருக்கும் வகையில் உறுதிபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.