ஆட்டு வியாபாரி கத்தியால் குத்தி‌ படுகொலை

2261பார்த்தது
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே திருமால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன்(40). ஆட்டு வியாபாரியான ராமநாதனுக்கும் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(45) என்பவரது மனைவிக்கும் இடையே தவறான பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் ராமச்சந்திரனுக்கு தெரிய வரவே ராமச்சந்திரன் தனது மனைவியை சத்தம் போட்டுள்ளார். எனினும் அந்த தவறான பழக்க வழக்கம் தொடர்ந்து ஓராண்டாக பிரச்சனை நிலவி வந்ததாக கூறப்படுகிறது. ‌‌ இந்நிலையில் நேற்று (மே13) இரவு 9. 30மணி அளவில் ராமநாதன் காரியாபட்டியிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்த போது அவரைப் பின் தொடர்ந்த ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் வீரா இருவரும் சேர்ந்து ராமநாதனை விரட்டி விரட்டி கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ராமநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காரியாபட்டி காவல் நிலைய போலீசார் ராமநாதன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ‌ மேலும் ராமநாதனை கொலை செய்தாக ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் வீரா இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி