விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா வீரசோழன் இஸ்லாமிய உறவினர்முறை டிரஸ்ட் போர்டு சார்பில் கல்வித் திருவிழா அல் அமீன் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த 2022-2023 கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் 90% மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வீரசோழன் அஸ்மா பள்ளியில் 13 மாணவ, மாணவியர் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மானாமதுரை, தேனி, சென்னை, கும்பகோணம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 21 மாணவ மாணவிகள் உட்பட மொத்தம் 40 மாணவ மாணவிகளுக்கு ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பணம், நற்சான்றிதழ், கேடயம் மற்றும் பல்வேறு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
மேலும் வீரசோழன் அஸ்மா பள்ளியின் தாளாளர் அப்துல் மாலிக் அவர்களுக்கு சிறந்த கல்வி சேவைக்கான விருது மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.