உ.பி., மாநிலம் ஜலான் மாவட்டத்தில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. பெண் செவிலியர் ஒருவர் பணிக்காக தனது ஸ்கூட்டரில் சென்ற வழியில், பைக்கில் வந்த 4 பேர் அவரை தாக்கி கீழே விழ வைத்து காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின்னர், அந்த மர்ம நபர்கள் தனது அந்தரங்க உறுப்புகளில் குச்சியை நுழைத்து மிளகாய் பொடியை தூவி சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.