செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தற்போது புதுவைக்கு வடகிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. தற்போது 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் புயல், இன்று மாலை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையை கடக்கக்கூடும்" என பேட்டியளித்துள்ளார். .