மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் சிறுமி ஒருவரை அவரின் வளர்ப்பு தந்தை கடந்த 2012-ல் பலாத்காரம் செய்தார். புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்த நிலையில் 2014-ல் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தனது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், தான் மட்டுமே வருமானம் ஈட்டுவதாக கூறி தண்டனையை குறைக்க குற்றவாளி மேல் முறையீடு செய்தார். இதை ஏற்ற நீதிமன்றம் தண்டனை காலத்தை 20 ஆண்டுகளாக குறைத்துள்ளது.