வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே கரையை கடக்க கூடும். இதனால், வட தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் நிலையில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குவிந்து செல்ஃபி எடுத்து வருகின்றனர்.